அதிக லாபம் தரும் ஜந்தடுக்கு விவசாயம்!

'விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தோட் படம் அமைத்துப் பராமரித்து வரும், பெங்களூரைச் சேர்ந்த பிருந்தா 'விவசாயத்தை நேசித்துச் செய்தால் அதில் சாதிக்க முடியும்' என்கிறார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் எனது சொந்த ஊர். தாத்தாவின் காலத்திற்குப் பின் விவசாயத்தை விட்டு விட்டோம். பொறியியல் படிப்பு முடிந்து, பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் நானும், ஐ.டி துறையில் எனது கணவரும் பணிபுரிகிறோம்.


கடந்த 2013-ம் ஆண்டில், பெங்களூரிலிருந்து சென்னைக்கு, கணவரை மாறுதல் செய்தது அவர் பணியாற்றிய நிறுவனம். அந்தச் சமயத்தில் வேலையிலிருந்து விலகி, ஆர்கானிக் பொருட்களுக்கான கடை வைக்க முடிவு செய்து, அதற்கான விவரங்களை இணைய தளத்தில் தேடியதில், இயற்கை விவசாயம் குறித்து அறிந்தேன்.


கடந்த 2016-ல் 13 ஏக்கராக, இந்த நிலத்தை வாங்கினோம். பயிர் செய்யாமல் 10 ஆண்டுகளாக இருந்த நிலத்தில் சீமைக்கருவேல மரங்கள் மண்டி இருந்ததுநிலத்தை விவசாயத்துக்கு தயார்படுத்தவேஒன்றரை ஆண்டு ஆனது.


அதில் 4 ஏக்கரில் ஐந்தடுக்கு விவசாயம் செய்கிறேன். தோட்டத்தின் உட்புறமாக நிலத்தின் ஓரத்தில், கம்பி வேலி அமைத்துநொச்சி, ஆடாதோடை, இலுப்பைகொடுக்காப்புளி, மருதாணி, பாதாம், புங்கன் ஆகிய கன்றுகளை, உயிர் வேலியாக நடவு செய்துள்ளேன்.


உயிர்வேலியிலிருந்து உட்புறமாக 2அடி ஆழம், 10 அடி நீளம் என்ற கணக்கில் அகழியும், 75 சென்ட் பரப்பளவில், 6 அடி ஆழத்தில், பண்ணைக் குட்டையும் அமைத்திருக்கிறேன் பண்ணைக் குட்டையின் கரையில், வெட்டி வேர் நடவு செய்திருக் கிறேன்.


ஐந்தடுக்கு விவசாய முறையில், முருங்கைதென்னை,நெல்லி, வாழை, மாதுளைபப்பாளி, அத்தி, கொய்யா, மா, சப்போட்டா ஆகியவற்றை நடவு செய்திருக்கிறேன்வரப்புகளில் மலைவேம்பு, தேக்கு, சந்தனம்மகோகனி, தீக்குச்சி மரம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறேன்சமீபத்தில் தான் 1 ஏக்கரில் நிலக்கடலை அறுவடையும் முடிவடைந்தது.


அணில், மயில், முயல்கள் ஆகியவை சாப்பிட்டது போக, 604 கிலோ நிலக்கடலை மகசூல் கிடைத்தது. அடுத்த விதைப்புக்காக கிலோ கடலையை வைத்து மீதியை பெங்களூரில் விற்பனை செய்ததன் மூலம் ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைத்ததுஅதில் இதர செலவுகள் 18 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அடுத்து துவரை, எள்ளை சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.


விரைவில் பெங்களூரில் பணியை விட்டுவிட்டு இங்கு வர உள்ளேன். தோட்ட பராமரிப்புக்காக இருவரை நியமித்துள்ளேன். தினம் காலை, மாலை விவரங்களைக் கேட்டறிவேன் என்கிறார் பிருந்தா. தொடர் புக்கு : 72999 24616.


இலாபம் தரும் இயற்கைப் பீர்க்கன்


கோவை மாவட்டம் அன்னூரில் இருந்துஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை நோக்கிச் செல்வோம். இப்போது நாம் சந்திக்க இருப்பது இயற்கைப் பீர்க்கன் சாகுபடி செய்து வரும் வேலுச்சாமி அவர்களை


முழுமையாக இரசாயனக் கலப்பே இல்லாமல், இயற்கை முறையில் பீர்க்கன் சாகுபடி செய்து, பறிப்புக்கு ரூ. 25 ஆயிரம் பார்த்து வருகிறார் அவர்.


இவர் செய்வது பந்தல் காய்கறி சாகுபடி. பீர்க்கன் சாகுபடியோடு, புடலை சாகுபடியும் உண்டு. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, எலெக்டிரிக்கல் தொழில் செய்து வந்த இவர், அத்தொழிலில் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், இயல்பாகவே இருந்த ஆர்வத்தால், திடீரென முழுமை யாக விவசாயத்தில் இறங்கி விட்டார்.


இவருடைய தாத்தா, அப்பா ஆகியோர் நெல்லி, டில்லி கரும்பு, கம்பு, மஞ்சள், வாழை போன்ற பணச்சாகுபடி செய்து பெற்றலாபகரமான விவசாய அனுபவத்தை இவரும் அறிந்திருந்தார். தம்ப. மஞ்சள், வாழை போன்ற பணச்சாகுபடி செய்து பெற்ற, லாபகரமான விவசாய அனுபவத்தை இவரும் அறிந்திருந்தார்.


கரும்பு சாகுபடி செய்து வந்த வேலுச்சாமி, நம்மாழ்வாரின் வார்த்தைகளை உள் வாங்கி, இயற்கை விவசாயமே இனி இந்த தேசத்தின் ஒரே இலக்கு' என்ற செயல்பாட்டை முன்னெடுக்க முனைந்திருக்கிறார்.


இதனால் விவசாயத்தில் இறங்கிய இரண்டாம் ஆண்டிலேயே, அது பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு, சாகுபடிச் செயல்பாட்டில் இறங்கி விட்டார். அது வெற்றிகரமானதாகவும் தொடர்ந்து லாபம் தருகிறது.


சொட்டு நீர் பாசனம் மூலமாக கரும்பு சாகுபடி செய்து வந்தவர், மற்றவர்கள் போல அந்த அறுவடை முடிந்ததும், நடவு முன்பாக கரும்புக் காட்டை தீயிட்டுக் கொளுத்து வதைப் போலச் செய்யவில்லை.


அப்படி கொளுத்துவதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடுவதை நம்மாழ்வாரின் வழிகாட்டலில் உணர்ந்த அவர், அதன்படியே செயல்பட்டுள்ளார்.


இப்படிப்பட்ட கூர்ந்த நோக்குடன் இயங்கிய அவர், கரும்பு சாகுபடி அதன் பின், சுமார் 60 சென்ட் நிலத்தில் இயற்கை வழியில் காய்கறிசாகுபடி செய்திருக்கிறார். 'இயற்கை வழி விளைந்த காய்கறிகள்' என்ற போர்டு வைத்து தொடங்கிய விற்பனை , பெரிய வாடிக்கையாளர் வட்டத் தையே உருவாக்கி விட்டது.


இவ்வாறாக தண்டுக்காரன் பாளையத்தில் தொடங்கிய விவசாயம் நீர்ப் பற்றாக் குறையால் புளியம்பட்டிக்கு இடம் மாறியிருக்கிறது. கால் ஏக்கர் மானாவாரியை குத்தகைக்கு எடுத்து பந்தல் சாகுபடியில் இறங்கி இருக்கிறார் காய்கறி விளைச்சலில் இன்று வளமான லாபம் பார்த்து வருகிறார் வேலுச்சாமி.


குறிப்பாக, இயற்கை முறையில் செய்து வரும் பீர்க்கன் சாகுபடியில் அமோக இலாபம் பெற்றுள்ளார். அவர் செய்து வரும் சாகுபடி முறைகள் எளிய முறையில் நிறைந்த லாபம் தரும் முறையாகும். 


பீர்க்கன் சாகுபடியில் நாற்பத்தைந்தாவது நாள் முதல் நூறாவது நாள் வரை அறுவடை எடுக்கலாம். இதில் தரமான விளைச்சல் என்பது ஒரு காய்க்கு எடையானது அரைகிலோ முதல் 700 கிராம் இருப்பது. அடுத்தது கிலோவுக்கு 50 ரூபாய் கிடைப்பது. பீர்க்கன் சாகுபடியில் ஆண்டு முழுவதும் விதையும் அறுவடையுந்தான். ஏக்கருக்கு காய 500 கிலோ கிடைத்து, கிலோ ஐம்பது ரூபாய்க்கு போனால் நாளொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்கிறார் வேலுச்சாமி. தொடர்புக்கு: 98425 53068.


விவசாயிகளுக்கு உதவுகிறோம்:


விவசாயிகளுக்கு கைகொடுக்கும் 'நபார்டு' எனப்படும். தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் திட்டங்கள் குறித்துக்கூறும், திண்டுக்கல் மாவட்ட நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலச்சந்திரன் தெரிவித்த விவரங்கள் வருமாறு.



நபார்டு வங்கியின் பல்வேறு திட்டங்களில் நீர்ச்செறிவு மேலாண்மை, முக்கியமான திட்டமாகும்.


மழைநீரைச் சேமிக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட திட்டம் இது.


திண்டுக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், 11 நீர்ச்செறிவு மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 11 ஆயிரம் எக்டேர் நிலங்கள் பயன்பெற்று உள்ளன.


தற்போது பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் எட்டு இடங்களில் பருவகால மாற்றத்துக்கான தகவலமைப்புச் செறிவு மேலாண்மைத் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறோம்.


திண்டுக்கல் மாவட்டத்தில், நபார்டு வங்கியின் நிதியுதவி மூலம், 14 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.


தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான், அதிக எண்ணிக்கையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. |


'விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குதல் 2020' திட்டமும் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், ரெட்டியார் சத்திரம் ஆகிய பகுதிகளில், நபார்டு வங்கியின் மூலமாக 24. 34 லட்ச ரூபாய மானிய உதவியுடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.


இதைத்தவிர கிராம அங்காடி மற்றும் கிராமப்புறச்சந்தை உருவாக்குதல், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், ஊரகக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, வளம் சார்ந்த கடன் திட்டம், சிறு தொழில் பயிற்சித் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


தெளிப்பு நீர்ப் பாசனம், கிணற்று நீர் உறிஞ்சு குழி, மண்புழு உரம் தயாரிப்பு குழி, சாண எரிவாயுக் கலன், அசோலா வளர்ப்புத் திடல் என தேவையுள்ள விவசாயிகள் எங்களை அணுகினால், உதவ காத்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டார் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலசந்திரன். தொடர்புக்கு: 90406 15.500.


குறிப்பு: நபார்டு வங்கியின் திட்டங்கள் பற்றி விரிவாக அறிய, விவசாயிகள், அந்தந்த மாவட்ட நபார்டு மேலாளர்களை அணுகி பயன்பெறலாம்.


- கிராமத்தான்.