பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி ஓவர் குடி விவசாயி பரமசிவன் சொல்கிறார். எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ள நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் முழு நேர விவசாயத்தைத் தான் செய்து வருகிறார்.
எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பாரம்பரிய நெல் ரகங்களைத் தான் பயிரிடுகிறேன். இப்போது 3ஏக்கரில் மாப்பிள்ளைச் சம்பா, தலா 1 ஏக்கரில், காட்டுயானம், கிச்சலி சம்பா நெல் வகைகளை சாகுபடி செய்கிறேன்.
கிச்சிலி சம்பா 135 லிருந்து 140 நாட்கள், மாப்பிள்ளை சம்பா 160 லிருந்து 165 நாட்கள், காட்டுயானம் 180 லிருந்து 185 நாட்களில் அறுவடைக்கு வரும். இது போன்ற பாரம்பரிய நெல் வகைகளில் இயல்பாகவே களை, பூச்சி தாக்குதல் குறைவு. நோய் எதிர்ப்புத்திறன் அதிகம்.
இந்த நெல் ரகங்கள் நல்ல உயரமான பயிராக வளரும். 50 லிருந்து 60 நாட்களிலேயே ஒன்றரை அடி உயரத்திற்குப் பயிர் வந்து விடும். நிழல் விழுவதால் களை ஏற்படாது.
இயற்கை விவசாயத்திற்காக நிலத்தைப் பக்குவப்படுத்த மாட்டு எரு, ஆட்டுக் கிடையில் கிடைக்கும் சாணம், பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே நிலத்தில் பயன் படுத்துவேன். இதனால் படிப்படியாக கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
நான் விளைவித்த பாரம்பரிய நெல்லை அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக்கூட்டி நேரடியாக விற்பனை செய்கிறேன். பலர் இங்கேயே வந்து வாங்கிச் செல்கின்றனர்.
ஏக்கருக்கு 21 மூட்டை நெல் கிடைத்தது. அதை காயவைத்து, சுத்தப்படுத்தியதில் 20 மூட்டை நெல் கிடைத்தது. அதில் 10 மூட்டை யை அவலாக மாற்றினேன். 300 கிலோ கிடைத்தது. 1கிலோ 100 ரூபாய் வீதம் விற்றதில் 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
ஒன்பது மூட்டை நெல்லை மிஷினில் கொடுத்து உமியை மட்டும் நீக்கி அரிசியாக மாற்றியதில் 315 கிலோ அரிசி கிடைத்தது. கிலோ 80 ரூபாய் என விற்றதில் 25 ஆயிரத்து 200 ரூபாய் கிடைத்தது.
மீதமுள்ள ஒரு மூட்டை நெல்லை காய வைத்து, விதையாக மாற்றி 48 கிலோ விதை யை 60 ரூபாய் என விற்றதில் 2,880 ரூபாய் கிடைத்தது.
இவ்வாறு 1 ஏக்கரில் மொத்தமாக 60 ஆயிரத்து 780 ரூபாய் கிடைத்தது. செலவு போக 32 ஆயிரத்து 480 ரூபாய் லாபம் பார்த் தேன். இயற்கை விவசாயத்தை தொழி லாக பார்க்கக் கூடாது.
இதில் மனித நேயம் உள்ளது. விஷமில்லாத உணவை உற்பத்தி செய்வதால் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனநிறைவு ஏற்படுகிறது என்கிறார் பரமசிவன். தொடர்புக்கு: 99433 84204.
பாகற்காய் சாகுபடி நுட்பங்கள்:
'ஒரு கொடியைத் தூக்க ஓராயிரம் பாவக்காய்' என்ற கிராமியப் பழமொழியே பாகற்காயின் செழுமையான மகசூலை உணர்த்தும். அப்படி கொத்துக் கொத்தாக காய்க்கக் கூடியது.
கொடியை மெல்லிய கயிறு அல்லது சணல் கயிறு கொண்டு கட்டி பந்தலில் ஏற்றிவிட வேண்டும். பந்தலைத் தொட்டவுடன், 4,5 பக்கக் கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொடிகள் தோன்ற ஆரம்பித்தவுடன் 2 மீட்டர் உயரத்திற்குப் பந்தல் அல்லது தட்டி கள் அமைத்து அதில் ஏற்றி விட வேண்டும். மரக்குச்சிகள் பயன்படுத்தும் போது 6x6 மீ இடைவெளியிலும் கல்தூண்கள் என்றால் 10x10 மீ இடைவெளியிலும் நட்டு அதன் மேல் கம்பிகளை கிடைமட்டமாக கட்ட வேண்டும்.
இதில் கொடிகளை படரச் செய்ய வேண்டும். கல்தூண் கொண்டு பந்தல் அமை க்க ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவாகும்.
பாகற்காயில் கோ1, எம்.டி.யு1, கோயம் புத்தூர் நீலப்பச்சை, கோயம்புத்தூர் வெள் ளை, நீலம் போன்ற இரகங்களை கோவை வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள து.
பாகற்காய் வடிகால் வசதியுள்ள மணலும், மண்ணும் கலந்த வளமான நிலத்தில் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 லிருந்து 7.5 என்ற அளவிற்கு இருக்க வேண்டும். இது ஒரு வெப்ப மண்டலப் பயிர் பெரும் பாலும் ஆடி மற்றும் தை மாதங்களில் நேரடி நடவு செய்ய ஏற்றது.
உரிய வேளாண் அலுவலர்களின் ஆலோ சனை பெற்று நிலத்தைப் பண்படுத்தி விதை த்து இயற்கை இடு பொருட்களை பயன்படுத்தி சாகுபடியல் நல்ல மகசூல் எடுக்கலாம். ஒரு ஏக்கர் விதைப்பு செய்ய 600 கிராம் விதை தேவைப்படுகிறது.
பாகற்காயை நேரடி விதைப்பு செய்யலாம் அல்லது நெகிழிப் பைகளில் வளர்த்தும் நடவு செய்யலாம். 15 நாட்கள் வயதுடையவை நடுவதற்கு சிறந்தது.
விதைகள் முளைத்து வரும் வரை தினமும் நீர் ஊற்றுதல் வேண்டும். உரிய உரங்களை தக்க ஆலோசனையின் பேரில் தவறாது இட வேண்டும். சொட்டுநீர் பாசனம் என்றால் நீரில் கரையும் உரங்களை அதனுடன் கலந்து அளிக்கலாம். விதைத்த 15 நாளிலும் 30 நாளிலும் களை எடுப்பது முக்கியம்.
உரமிடல், களையெடுத்தல், பயிர்பாதுகாப்பு ஆலோசனைகளை தக்க முறையில் செய்து வந்தால் நல்ல மகசூல்பார்க்கலாம். விதைத்த 60 முதல் 65 நாட்களிலிருந்து காய்கள் அறுவடைக்கு வரும். காய்களை 3 முதல் 5 நாட்கள் இடைவெளியல் அறுவடை செய்ய வேண்டும். விதைகள் முதிர்வடையும் முன்னரே அறுவடை செய்ய வேண்டும்.
எக்டருக்கு 140 லிருந்து 150 நாட்களில் இரகங்களில் 14 டன் காய்களும், வீரிய ஒட்டு ரகங்களில் 40 டன் காய்களும் விளைச்சலாகக் கிடைக்கும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயின் பயன்பாட்டில் இரத்த சர்க்கரை கட்டுக்குள் வரும். விவரங்களுக்கு காய்கறிப் பயிர்கள் துறை, கோவை வேளாண் பல்கலைக் கழகம், அலைபேசி: 94432 06004.
போத்து முறை மர வளர்ப்பின் சிறப்பு:
மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து விளக்கு கிறார் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன் பட்டி எனது சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமப்பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.
புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்தூர் கிராமத்தில் ஆனந்த ராவ் என்பவர் ஆலமரக் கிளையை வெட்டி போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார்.
அந்த பகுதியில் பணியாற்றிய போது ஆனந்தராவுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் மூலந்தான் போத்து முறை நடவு பற்றி வற்றி அறிந்தேன். போத்து என்றால் எங்கள் பகுதியின் மரத்தின் கிளை எனப்பொருள்.
ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, தி வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை. உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை.
இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள் 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொம்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும்.
மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை கரும்பு வெட்டுவது போல சரியாக வெட்ட வேண்டும்.
இன்று நடப்போகிறோம் என்றால் முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால் கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி நிழலில் வைக்கலாம்.
முன்னதாக 4அடி ஆழம், 4அடி சுற்றளவுக்கு குடி தோண குழி தோண்ட வேண்டும். அந்த குழியை ஒரு வாரம் அப்படியே விட வேண்டும்.
நடவிற்கு முந்தைய நாள் மாலை ஒரு குடம் தண்ணீரை அந்தக்குழியல் ஊற்றவேண்டும். மறுநாள் காலையில் 5கிலோ மக்கிய தொழு உரத்துடன் மேல் மண்ணைக் கலந்து குழிக்குள், 1.5 உயரத்திற்கு நிரப்ப வேண்டும்.
அந்த குழிக்குள் மரக்கிளை நட்டு சுற்றிலும் நன்றாக மண் மிதித்து மண்ணைக் குவியல் போல வைக்க வேண்டும். இல்லாவிட்டால் காற்றின் சலனம் நீர் சலனத்தால் வேர் பிடித்தல் தாமதமாகும். கிளையின் உச்சிப் பகுதியில் சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும்.
அடுத்த 45 லிருந்து 50 நாட்களில் இலைகள் தும் துளிர்விடும். வெப்பம் குறைந்த ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம், இதனால் மரமாக வளரும் காலம் குறைந்து விரைவில் பலன் கிடைக்கும்.
எனது பணி ஓய்வில் கிராமங்களில் இந்தப் போத்து தொழில் நுட்பத்தை பரவலாக்க எண்ணியுள்ளேன் என்கிறார் துணை வேளாண் அலுவலர் அய்யப்பன் . தொடர்புக்கு: 99438 50097. - கிராமத்தான்.