வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள்!

இந்தியாவில் வாழை சுமார் 4.66 லட்சம் 'எக்டர் பரப்பளவில் பயிராகிறது. இதில் 25 சதம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. தட்பவெப்ப நிலை, நீர்ப்பாசன வசதி, மண்ணின் தன்மை போன்றவற்றைப் பொருத்து சாகுபடி முறைகளும் இரகங்களும் மாறுபடும். பூவன், நேந்திரன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, ரொபஸ்டா, மொந்தன் போன்ற இரகங்கள் முக்கியமானவைகளாகும்.


                            கன்றுகள் தேர்வும் நேர்த்தியும்


தாய் மரத்திற்கு அருகாமையில் கிழங்கி லிருந்து வளரும் 2 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சுமார் 3 மாத வயதான ஈட்டிக் கன்றுகளே சிறந்தவை. கன்றின் எடை 1.5 - 2.0 கிலோவாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்காத கிழங்குகளாகவும் இருக்க வேண்டும். கிழங்கின் அடிப்பகுதியிலுள்ள வேர்களை நீக்கிவிடவேண்டும். கிழங்கின் தண்டுப்பகுதி 20 செ.மீ இருக்குமாறு தேர்ந்தெடுக்கவும்.


வாடல் நோயைத் தவிர்க்க கிழங்குகளை 5 நிமிடம் 0.1 சதம் கார்பேண்டாசிம் கரைசலில் நனைத்து நடவு செய்யவேண்டும். நூற்புழு தாக்குதலைத் தவிர்க்க, தோல் சீவிய கன்றுகளை சேற்றுக் சூழம்பில் நனைத்து அதன் மீது கார்போஃபுயூரான் குருணை மருந்தை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற1அளவில் தூவி நடவேண்டும்.


                                                 குழி எடுத்தல்


45 கன செ.மீ. அளவுள்ள குழிகளை எடுத்து ஒவ்வொரு குழிகளிலும் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் லிண்டேன் ஆகியவற்றை இட்டு மேல் மண்ணோடு நன்கு கலக்கி, குழியின் நடுவில் நேர்த்தி செய்யப்பட்ட கன்றுகளை வைத்து மண்ணால் மூடி, சுற்றிலும் நன்கு மிதித்திட வேண்டும்.


                                           இரகங்கள் இளைவெளி


ரோபஸ்டா , நேந்திரன் 1.8 x 1.8 மீ குள்ள வாழை 1.5 x 1.5 மீ பூவன், நெய், பூவன், மொந்தன்) ரஸ்தாளி, நெய்வண்ணன் 2.1 x2.1 மீ


                                                   நீர்பாசனம்


நடவு செய்த உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அதற்குப் பிறகு 4 நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் வாரத்திற்கு ஒருமுறை தொடர் ந்து தோட்டக்கால் நிலத்திற்கும் மற்றும் 10லிருந்து15 நாட்களுக்கு ஒருமுறை நஞ்சை பகுதிகளுக்கும் நீர் பாய்ச்ச வேண்டும்.


                                             பின் செய் நேர்த்தி 


1. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மண் அணைக்கவேண்டும்


2. மாதம் ஒருமுறை பக்கக் கன்றுகளை அகற்ற வேண்டும்


3. காய்ந்த மற்றும் நோய் தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து எரித்து விட வேண்டும்


4. கடைசி சீப்பு வெளிவந்த ஒருவாரத்தில் ஆண் பூவை ஒடித்து விடவேண்டும்


5. குலை தள்ளும் நேரத்தில் மரங்கள் சாய்ந்த விடாமல் இருக்க முட்டுக் கொடுக்க வேண்டும்.


6. குலைக்காம்பு அழுகல் நோயைத் தடுக்ககண்ணாடி இலை கொண்டு குலைக் காம்பை மூடி விடவேண்டும்.


7.வெய்யிலினால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க குலைகளை வாழை இலைகளைக் கொண்டு மறைத்து வைக்க வேண்டும்.


8. மரம் தூர்விடும் தருவாயில் மறுதாம்புப் பயிருக்கு ஒரு வீரிய கன்றை ஒதுக்கி விட வேண்டும்



                                      வளர்ச்சி ஊக்கிகள்


பழத்தின் தரத்தை உயர்ந்த 2.4டி மருந்தை 25 பி.பி.எம் என்ற அளவில் பூவன், மொந்தன், ரஸ்தாளி, கோ 1 ஆகிய வாழைகளில் தெளிக்க வேண்டும்.


                                  பயிர்ப் பாதுகாப்பு பூச்சிகள்


                                            1.கிழங்கு வண்டு


கட்டுப்படுத்த 1020 கிராம் கார்பரில் அல்லது லிண்டேன் தூள் 20 கிராம் மருந்தை தண்டுப்பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறி விடவேண்டும்.


                                          2. வாழை அசுவிணி


பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் (அ) மோனோ குரோட்டோபாஸ் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகித்தில் கலந்து தண்டின் மேலிருந்து அடிவரை தெளிக்க வேண்டும். இதனை 21 நாள் இடைவெளியில் சுமார் 3 தடவை தெளிக்கவேண்டும்.


                                          3. சாறுண்ணிகள்


எக்டருக்கு மீதைல் டெமடான் 20 2 மில்லி + ஒரு லிட்டர் தண்ணீ ர் ( அ) மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி + ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் ஏதாவது ஒன்றினை தெளித்து கட்டுப்டுத்தவேண்டும்.


                                 4. தண்டு துளைக்கும் வண்டு


வாழைத்தண்டினை இவ்வண்டு துளைகளிடுவதால் பழுப்பு நிறத்தைக் கொண்ட பிசுபிசுப்பான திரவம் வெளிவரும். இதனை கட்டுப்படுத்த காய்ந்த இலை களையும், சருகுகளையும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்க வேண்டும். மோனோகு ரோட்டோபாஸ் 150 மிலியுடன் 350 மில்லி தண்ணீரை எடுத்துக்கொண்டு தண்டின் அடிபாகத்திலிருந்து 60 செ.மீ. உயரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள ஊசியின் வழியாக 2 மில்லி அளவு செலுத்த வேண்டும். இதற்கு ஊசியை 30 டிகிரி சாய்வாகக் கீழ் நோக்கி தண்டினுள் ஆழமாக செலுத்த வேண்டும்.


                         நோய்கள் சிகடாக்கோ இலைப்புள்ளி நோய்


தாக்கிய இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அவை பழுப்பு நிறக்கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கும் நோயினை கட்டுப்படுத்த கார்பேண்டாசிம் 1 கிராம் (அ) மான்கோசெப் 2 கிராம் (அ) காப்பர் ஆக்ஸி குளோரைடு 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு 10 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.


                                             முடிக்கொத்து நோய்


மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் மூன்றாவது மாதத் திலிருந்து ஊசி மூலம் தண்டு பாகத்தில் செலுத்த வேண்டும்.


                                           பனாமா வாடல் நோய்


பனாமா வாடல் நோய் நோய் தாக்கப்பட்ட செடிகளை வேரோடு அகற்றிட வேண்டும். கார்பெண்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்து ஊசி மூலம் தண்டுப்பகுதியும்,கிழங்கும், சேறும் பகுதியில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ ஆழத் தில் செலுத்த வேண்டும். இவ்வாறு கன்று நட்ட 3ஆவது மற்றும் 6ஆவது மாதங்களில் செய்ய வேண்டும்.


                                   


                                                      அறுவடை


கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்கு தயாராகிவிடும். மண் மற்றும் இரகங்கள் ஆகியவற்றைப் பொருத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.


-முனைவர்.இரா.வேலுசாமி


இணைப் பேராசிரியர்


(வேளாண் விரிவாக்கம்)


வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,


மதுரை - 625 104