நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்ற பெண் விவசாயி இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு லட்சம் லாபம் ஈட்டி மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கையால் சிறந்த விவசாயி விருதும், 1 லட்சம் ரொக்க பணமும், பாரம்பரிய நெல் விவிசாயி விருதும் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த கிருஷ்ணம்மாளை தமிழ் விவசாயி உலகம் இதழுக்காக ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்.
நெல்லை மாவட்டம் பணகுடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பதிவிரி சூரியன் கிராமம். இக்கிராமம் தான் கிருஷ்ணம்மாளின் பூர்வீக கிராமம் ஆகும். தன் கணவர் தனக்காக விட்டுச் சென்ற இந்த 5 ஏக்கர் நிலம் தான் கிருஷ்ணம்மாளுக்கும் அவருடைய குழந்தை களுக்கும் உணவு அளித்துள்ளது. வானம் பார்த்த பூமியாகிப்போன இப்பகுதியில் பெரிய ஆறுகள் கிடையாது.
கிணற்று பாசனம் மட்டுமே உண்டு. குறைந்த அளவு நீரை வைத்துக்கொண்டு மிகுந்த மகசூலை அறுவடை செய்து சாதித்து காட்டியுள்ளார் கிருஷ்ணம்மாள். படிப் பறிவற்ற கிருஷ்ணம்மாளுக்கு முழுவதும் துணை நின்றது அவரது மகன் முருகன் தான். படிப்பை பாதியில் விட்டு விட்டு குடும்ப சூழலால் மும்பை சென்ற முருகன் பின்னர் தன் தாயாருக்குத் துணையாக சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார்.
முருகன் நம்மிடம் தொடர்ந்தார், இப்பகுதி கொஞ்சம் வறட்சியான பகுதிதான் ஆரம்பத்தில் முழுக்க, முழுக்க ரசாயண உரத்தை பயன்படுத்தி தான் விவசாயம் பார்த்தோம்.
எங்களை மாற்றியது பக்கத்து வயலுக்குச் சொந்தக் காரரான மகேஷ்வரன் தான் என்கிறார் கிருஷ்ணம்மாள். மகேஷ் வரன் கிருஷ்ணம்மாள் மற்றும் முருகனை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்து அதிமாக பேசியுள்ளார்.
பின்னர் முருகனும் இயற்கை விவ சாயத்திற்கு மெல்ல, மெல்ல மாறியுள்ளார். ஆனால் மிகக்குறைவான விளைச்சலே முருகனுக்கு கிடைத்துள்ளது. எனினும் கிருஷ்ணம்மாள் கொடுத்த ஊக்கத்தால் முருகன் தொடர் முயற்சி செய்து ஆத்தூர் கிச்சிலி சம்பா நெல் வகையை பயிர் செய்து இந்த அரிய சாதனையை செய்திருக்கிறார்.
மகனுக்கு மிக அதிக அறிவுரை கூறியதோடு தன் வயலில் அதிக நேரம் செலவழித்து கண்ணும் கருத்துமாக இருந்து இந்த சாத னையை செய்துள்ளார் கிருஷ்ணம்மாள். கிச்சிலி சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யும் முறை குறித்து கிருஷ்ணம்மாளிடம் கேட்டோம். அவர் நம்மிடம் பாரம்பரிய அனைத்து நெல் அனைத்து மண்ணிலும் விளையும். சம்பா பட்டத்திற்கு கிச்சிலி சம்பா ஏற்ற ரகமாகும். இதன் வயது 100 நாட்கள்.
சாகுபடிக்காக நாங்கள் தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஒட்டி மூன்று நாட்கள் காய விட வேண்டும். பிறகு ஏக்கருக்கு 18 கிலோ என்ற வகையில் தக்கைப் பூண்டு விதையை விதைத்து ஒரு சால் உழவு ஒட்டி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நான்கு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் 45 நாட்களுக்குப் பிறகு தக்கைப் பூ பூக்கத் தொடங்கும். அந்த சமயத் தில் அதை மடக்கி உழுது வயலில் தண்ணீர் கூட்டி 10 நாட்கள் அழுக விடவேண்டும்.
ஒரு ஏக்கர் நடவுக்கு ரெண்டு சென்ட் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஐந்து கிலோ விதை நெல்லை நான்கு மணி நேரம் உலர்த்தி சணல் சாக்கில் கட்டி தண்ணீர் தொட்டியில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை உலர் த்தி இருட்டு அறைக்குள் 12 மணி நேரம் வைத்தால் விதைகள் முளையிடத் தொடங்கும்.
முளை விட்ட விதை நெல்லை ஓலைப் பாயில் கொட்டி 10 லிட்டர் தண்ணீரில் பஞ் சகாவ்யா கலந்து விதை நெல்லில் தெளிக்க வேண்டும். பிறகு 10 நிமிடம் உலர்த்தி நாற்றாங்காலில் தூவி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தொடர்ந்து ஈரப்பதம் இருப்பதைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதிலிருந்து 11 நாட்கள் கழித்து நாற்று நட தயாராகிவிடும். 15 ஆம் நாளுக்குள் வயலில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 ஆம் நாளிலிருந்து அடுத்து 20 நாட் களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமிர்த கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
20 மற்றும் 40 ஆம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 100 நாட்களுக்கு மேல் கதிர் பிடிக்கும் தருவாயில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 140 நாளுக்குப் பின் கிச்சிலி சம்பா நெல் அறுவடைக்கு தயாராகி விடும் என்று கூறும் கிருஷ்ணம்மாள் இயற்கை முறையில் அதிக மகசூல் பெற ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், அக்னி அஸ்திரம், மீன் அமினோ அமிலம், பயன் படுத்தினால் போதும் என்கிறார்.
கிருஷ்ணம்மாளின் இயற்கை விவசாயத் தைக் கண்ட வள்ளியூர் வேளாண்மைத்துறை ஆத்மா அலுவலர் பிரதாப் தேவதாஸ் முயற்சியால் தமிழக அரசின் பாரம்பரிய நெல் போட்டியில் கிருஷ்ணம்மாளும் கலந்து கொண்டார்.
கிருஷ்ணம்மாளின் முயற்சியை தமிழக அரசு பாராட்டி பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் என்ற விருதை தமிழக முதல்வர் எடப்பாடி வழங்கி கௌரவபடுத்தினார். பாரம்பரிய விவசாயம் செய்வது காலத்தின் கட்டாயம் இந்த மகசூல் போட்டியை வட்டார அளவில் நடத்தினால் விவசாயம் மேலும் செழிக்கும்.
விவசாயம் இயற்கை வேளாண்மைக்கு மாறும் பொதுமக்களும் இயற்கை உணவு களை உண்ணத் தொடங்குவார்கள். நான் எனது பாரம்பரிய அரிசியை 80 ரூபாய்க்கு விற்கிறேன். இயற்கை விவசாயம் தான் சமு தாயத்திற்கு மிகவும் நல்லது. என்று கூறும் கிருஷ்ணம்மாள் மற்றும் அவரது மகன் முருகனை மீண்டும் ஒரு முறை விவசாயி உலகம் சார்பில் வாழ்த்தி விடை பெற்றோம்.
தொடர்புக்கு
கிருஷ்ண ம்மாள் : 9600376861
நெல்லையிலிருந்து ச.மரிய செல்வம்
பரமேஸ்வரன்