தென்னை நார் ஏற்றுமதி பொருளாதார நகரமானது பொள்ளாச்சி! மத்திய அரசின் அறிவிப்பு

தமிழகத்தில் பொள்ளாச்சி இயற்கை அழகு மிகுந்த விவசாய பூமி ஆகும். பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த பொள்ளாச்சி பின்னர் திருப்பூர் மாவட்டம் ஏற்படுத்தப்ட்ட போது திருப்பூர் மாவட்டத்துடன் பொள்ளாச்சி சேர்க்கப்பட்டது.


பொள்ளாச்சியின் நாற்புறமும் மலைகளும், அணைகளும் சூழந்த ஒரு ரம்மியமான பகுதி ஆகும். ஒரு பக்கம் ஆளியாறு, வால்பாறை என்றும், மறு பக்கம் ஆனைமலை, டாப்சிலிப் என மலைப் பகுதிகளும் உள்ளனபொள்ளாச்சியிலிருந்து 28 கிமீ. தொலைவில் தான் உடுமலைப்பேட்டை உள்ளது.


உடுமலைப்பேட்டை அருகில் திருமூர்த்தி அணை உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து 40 கிமீ தொலைவில் கேரள மாநிலத்தின் பாலக்காடு உள்ளது. இப்படி பொள்ளாச்சியின் நான்கு புறமும் அணைக்கட்டுகளும், மலைகளும் உள்ளதால் பொள்ளாச்சியின் சீதோஷ்ண நிலை எப்போதும் குளு, குளு என்று இருக்கும்.


பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகு படி முதன்மையானது. கிராமங்களில் தென்னந்தோப்புகளுக்குள் நடந்து சென்று தான் வீடுகளுக்கு செல்ல வேண்டும். பெரும் பாலும் வீட்டைச் சுற்றியே தென்னந்தோப்புகள் இருக்கும் . இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறினால் தென்னந்தோப்புக்குள் தான் வீடு இருக்கம்.


பொள்ளாச்சி பகுதியில் தென்னை உற்பத்தி அதிகமாக இருப்பதால் தேங்காய் உற்பத்தியும் தென்னை உணவுப் பொருட்களும் தென்னை சார்ந்த பிற பொருட்களும் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே உற்பத்தியாகி வருகின்றன.


இவற்றுள் முக்கியமாக தென்னை நார் உற்பத்தித் துறையில் பொள்ளாச்சி முன்னணி நகரமாக விளங்கி வருகிறது. இத்துறையை மையமாகக் கொண்டு பொள்ளாச்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக தென்னை நார்த் துறை இருந்து வருகிறது.


அண்மை காலமாக சராசாரியாக ஆண்டு க்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமான அளவிற்கு தென்னை நார் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



இவ்வாறு பொள்ளாச்சி தென்னை நார் துறையில் முன்னணி நகரமாக இருந்தாலும், இங்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்கு விற்பதற்கான அடிப்படை வசதிகளின்றி உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.


உதாரணமாக பொள்ளாச்சியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கன் டெய்னர்களில் தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையால் பரிசோதனை செய்யப் பட்டு பின்னர் சீல் வைக்கப்படுகிறது.


இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பொள் ளாச்சியிலிருந்து சுமார் 28,000 கன்டெய்னர் தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.


இந்த பரிசோதனைப் பணியை பொள்ளாச்சியிலேயே முடித்து கன்டெய்னரில் சீல் வைக்கும் வகையில் பொள்ளாச்சியில் சுங்கத்துறை அலுவலம் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். மேலும் பொள்ளாச்சியை கயறு மற்றும் கயறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி பொருளாதார நகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வந்தனர்.


இதைத் தொடர்ந்து மத்திய அரசின் அயல்நாட்டு வாணிபக் கொள்கை 2015-20 (Forign Tade Policy) திட்ட த்தின் கீழ் அத்துறையின் டைரக்டர் ஜெனரல் அமிட் யாதவ் கடந்த 29.1.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பில் பொள்ளாச்சியை கயறு மற்றும் கயறு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி பொருளாதார நகரங்களின் பட்டியலில் பொள்ளாச்சியை சேர்த்து (The Town Of Pollachi has been notified as a Town of Export Excellence for Coir and Coir Products) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதனால் பொள்ளாச்சி பகுதி தென்னை உற்பத்தியாளர்கள் , கயறு மற்றும் கயறு பொருட்கள் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இவ்வாறு கயறு ஏற்றுமதி பொருளாதார நகரமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும், தேசிய அளவிலான சர்வதேச அளவிலான கண்காட்சிகளில் பங்கேற்கும் பொள்ளாச்சி ஏற்றுமதியாளர் களுக்கு நல்ல வரவேற்பும், பொள்ளாச்சியிலும் அது போன்ற கண்காட்சிகளை நடத்துவதற்கு நல்ல வாய்ப்பும் ஏற்படும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க் கின்றனர்.


மேலும் பொள்ளாச்சியில் கன்டெய்னர் சரி பார்ப்பு அலுவலகம் (Inland Container Depot) வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளது என்றும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.