தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டுக்கான தபட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,991 கோடி மேற்கண்ட இந்த விவரங்களுக்கான விளக்கத்தை சற்று விரிவாக பார்க்கலாம்.
பயிர் கடன் இலக்கு:
வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக பயிர் கடனாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் தமிழகத்தின் ஊரகப் பொருளாதாரத்திற்கு திறம்பட உதவி வருகின்றன. நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் பயிர் கடன்கள் வழங்க 10 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது வரை 10.60 லட்சம் விவசாயிகளுக்கு, 7,595 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் பயிர் கடனாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். கடன் தவணைகளை முன் கூட்டியே செலுத்துபவர் களுக்கு முழு வட்டியை தள்ளுபடி செய்ய பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திட்டங்கள்:
நீர்ப்பாசன திட்டங்களுக்கு மட்டும் ரூ.6,991 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குடி மராமத்து திட்டத்திற்கு நடப்பாண்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராம குளங்கள், ஊருணிகள் ஆழப் படுத்துதல், நகர்ப்புற கோவில் குளங்கள் புணர மைப்பு போன்ற பணிகள், ஊரக மற்றும் நக ராட்சி அமைப்புகளால் மேற் கொள்ளப்படும்.
காவிரி வடிநிலப்பகுதிகளில் உள்ள கால் வாய்களை தூர் வாரும் பணியை அடுத்த பருவ மழைகாலத்திற்கு முன் செய்வதற்கு 67.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சரபங்கா நீரேற்றுப் பாசனத்திட்டத்திற்கு 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை மத்திய நீர்வள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மீன் வளம் சார் திட்டங்கள்:
செங்கல்பட்டு விழுப்புரம் மற்றும் நாகப் பட்டினம் மாவட்டங்களில் 385 கோடி ரூபாயில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மீன்பிடி தடை காலத்தில் உதவித் தொகை வழங்கவும், மீனவர்களுக்கான சேமிப்பு திட்டத்திற்காக சிறப்பு உதவித்தொகை வழங்க 298,22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் 18 கோடி ரூபாய் 1 டிரான்ஸ் பாண்டர்கள் (இருப்பிடம் கண்டறியும் கருவி) பொருத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் அழகன் குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பாரைக் குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம் ஆறு காட்டுத்துறையிலும் 385 கோடி ரூபாயில் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 30 கோடி ரூபாயில் கடலரிப்புத் தடுப்பு சுவர்கள் கட்டபடும். மீன் வளத்துறைக்கு மொத்தம் 1,229.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாக் வளைகுடாப் பகுதி மீனவர்களுக்கான 2,000 இழுவலை மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 500 தூண்டில் செவுள் வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகள் கட்டப்பட்டுவருகின்றன.
விவசாயம் சார் மற்ற திட்டங்கள்:
தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது.
எனவே பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.724.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணை முறை 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ரூ.50 கோடியில் செயல் படுத்தப்படும். முன்பு அமைக்கப்பட்டுள்ள 75 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளோடு மேலும் 45 புதிய அமைப் புகள் அமைக்கவும் பட்ஜெட்டில ரூ.100.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 7,41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன வசதி பெறுவதற்காக ரூ.1844.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.75 கோடியும், உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க ரூ.165 கோடியும், அரவை காலத்தில் போக்குவரத்து மானியம் தர டன்னுக்கு ரூ.100 வீதம் ரூ.110 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்திரி, மஞ்சள், முருங்கை, வெங்காயம் போன்ற தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்க ரூ.18 கோடியில் முக்கிய பகுதிகளில் சிறப்புமையங்கள் உருவாக்கப்படும் தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் மையங்கள் உள்ளன.
மேலும் 200 கோடியில் 100 வட்டாரங்கள் மற்றும் 250 கிராமங்கள் அளவில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
வளர்ச்சி, விரிவாக்க திட்டங்கள்:
நீரை சிக்கணமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறையானது 2020-ஆம் ஆண்டில் 27.28 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி நெல் விதைப்பு முறை நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விரிவபடுக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் துடன் இணைந்து நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அத்திக்கடவு அவினாசி நீர்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கடு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர்நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென் காசி மாவட்டங்களில் உணவு பூங்காக்கள் அமைக்க ரூ.71 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை யிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் காவிரி குண்டலாறு நடைமுறை திட்டத்தோடு காவரி முதல் தெற்கு வெள்ளாறு வரையான இணைப்பு திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. இது சார் முதல் செயல்பாட்டு முன்னெடுப்பு நிதியாக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர் பாதுகாப்பு பரப்பை அதிகரிக்க 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் அளிக்கப்படும்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல் கிருஷ்ணகிரி, சேலம், திரு வண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 8 வேளாண் பதப் படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப் பட்டுள்ளது.
விவசாயத்திற்கு முன்னுரிமை:
வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் பட்ஜெட்டாக தமிழக அரசின் 2020-21 நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகம்:
வேளாண் துறையில் விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்த குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் கோரிக்கையை ஏற்று வேளாண் துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து வழிகாட்டல் அளிக்கும் திட்டம் தொழில் நுட்ப உத்திகளுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
நாட்டு மாடுகள் பராமரிப்பு:
சேலம் தலைவாசலில் அமைக்கப்படும் கால் நடை அறிவியல் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு இன மாடுகள் பராமரிப்பில் தனிக் கவனம் செலுத்தப்படும்.
விவாசாயிகள் தொடர்புடைய பல நிலை திட்டங்களை தமிழக அரசு இம்முறை கூடுதல் கவனத்துடன் தனது 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்ஜெட் தொடர்பான செயல்பாடுகளே விவசாயிகளை முழுமையாக மன நிறைவடையச் செய்யும் என்பது தானே உண்மை .
- விவசாய காந்த்.